தர்மபுரி: சட்டப்பேரவைத் தேர்தலில் அனைவரும் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்றவேண்டும் என்பதை வலியுறுத்தி பெண்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்டட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவரும், மாவட்டத் தேர்தல் அலுவலருமான எஸ்.பி. கார்த்திகா தொடங்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார்.
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலிருந்து பாரதிபுரம்வரை சென்ற இப்பேரணியில் பல்வேறு நாட்டுப்புற கலைஞர்கள் 100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், தப்பாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் இப்பேரணியில் இடம்பெற்றன.
பேரணியில் பங்கேற்ற பெண்கள் தேர்தலில் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர்.
இதையும் படிங்க...திமுக தேர்தல் அறிக்கை 2021 “இயற்கை வேளாண்மைக்கு தனிப்பிரிவு”