ETV Bharat / state

நூற்பாலையில் பயங்கர தீ விபத்து- 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதம்!

திருப்பூர்: பல்லடம் அருகே பஞ்சு நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் பஞ்சு மூட்டைகள் எரிந்து சேதமடைந்துள்ளன.

10 lakhs worth of goods damaged by spinning fire

author img

By

Published : Jun 29, 2020, 7:41 PM IST

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவருக்கு சொந்தமான பஞ்சு நூற்பாலை அதே பகுதியில் உள்ளது. மேலும் அங்கு 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று நூற்பாலையில் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இயந்திரத்திலிருந்து புகை வந்துள்ளது. அதனை பார்த்த ஊழியர்கள், உடனடியாக தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் நூற்பாலை என்பதால் தீ மளமளவென பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் நூற்பாலையை விட்டு வெளியே தப்பியோடினர்.

இதனையடுத்து உரிமையாளர் நடராஜனுக்கும், பல்லடம் தீயணைப்பு துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் சுவற்றை இடித்து உள்ளே சென்று தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் நூற்பாலையில் இருந்த சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் பஞ்சு எரிந்து சேதமடைந்தது. மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பல்லடம் காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.