திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்பென்டர் கூலித் தொழிலாளி சிவராஜ். இவரது மனைவி சரசு சிவராஜ் கடந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். இவர்களின் இரண்டாவது மகனான தினேஷ் (20) தேங்காய் மண்டியில் கூலி வேலை செய்துவருகிறார்.
நேற்று முன்தினம் (டிசம்பர் 9) இரவு தினேஷ் அவரது பாட்டி வீட்டிற்கு நடந்துசென்றுள்ளார். அப்போது ராமாயண தோப்பு பாலாற்றின் கிளை ஆற்றில் எதிர்பாராதவிதமாக நீரில் விழுந்து மூழ்கியுள்ளார்.
பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்று காவல் துறையினர் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி அவரைச் சடலமாக மீட்டனர். இச்சம்பவம் தொடர்பாக வாணியம்பாடி நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: பூட்டிய வீட்டில் 15 சவரன் நகைகள் கொள்ளை