ETV Bharat / state

திருப்பத்தூர் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. வேலூர் இளைஞர் கைது! - திருபத்தூர் செய்தி

SBI ATM theft in katpadi: வேலூர் அருகே ஸ்டேட் பேக் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ள அடிக்க முயன்ற இளைஞரை, ரோந்துப் பணியில் இருந்த காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

திருபத்தூரில் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட இளைஞர் கைது

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 2, 2024, 3:26 PM IST

திருப்பத்தூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கணியம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் சக்திவேல் (24). இவர் நேற்று (ஜன.1) நள்ளிரவு காட்பாடியில் இருந்து ரயில் மூலம் திருப்பத்தூருக்கு வந்துள்ளார். பின்னர் ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியில் இயங்கி வரும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் (State Bank of India) ஏடிஎம்மில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியுள்ளார்.

இதன் அடிப்படையில், நள்ளிரவு ஒரு மணி அளவில் ஏடிஎம் இயந்திரம் மற்றும் சிசிடிவி கேமராக்களை சக்திவேல் உடைத்துள்ளார். இதனிடையே, ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயற்சிப்பது குறித்து ஹைதராபாத்தில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் தலைமை அலுவலகத்திற்கு எச்சரிக்கை சென்றுள்ளது.

பின்னர், அது குறித்து தலைமை அலுவலக அதிகாரிகள், திருப்பத்தூர் மாவட்ட காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில், ரோந்துப் பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து, ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்த சக்திவேலை கையும் களவுமாக பிடித்துள்ளனர். அதனைத் தொடரந்து அவரை கைது செய்து, காவல் நிலையம் அழைத்துச் சென்று, வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சொத்து தகராறு காரணமா கணவன், மைத்துனர் சுட்டுக் கொலை; போலீசில் சரணடைந்த பெண்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.