ETV Bharat / state

12 வயது சிறுமிக்கு பிறந்த குழந்தை - பாலியல் வன்புணர்வு செய்த கட்டடத்தொழிலாளி கைது - சிறுமி பெற்றெடுத்த குழந்தை

ஆம்பூர் அருகே 12 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்ததைத் தொடர்ந்து சிறுமியைப் பாலியல் வன்புணர்வு செய்த கட்டடத் தொழிலாளியை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.

12 வயது சிறுமிக்கு பிறந்த குழந்தை
12 வயது சிறுமிக்கு பிறந்த குழந்தை
author img

By

Published : May 23, 2022, 8:26 PM IST

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 12 வயது சிறுமி. இவர் தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கட்டடத்தொழிலாளி சீனி என்கிற சீனிவாசன் (20) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

அதனை தனக்கு சாதமாக பயன்படுத்திய இளைஞர், மாணவியிடம் ஆசை வார்த்தைக் கூறி பல முறை பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறார். இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி தனது தாயிடம் தனக்கு வயிறு வலிப்பதாக அச்சிறுமி கூறியுள்ளார். அதன் பேரில் மாணவியை சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற போது, அங்கே சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் செய்வதறியாது திகைத்துப் போயிருந்தார். உடனடியாக மருத்துவமனை நிர்வாகம் இது குறித்து திருப்பத்தூர் மாவட்ட சமூகப் பாதுகாப்பு நலத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சமூகப்பாதுகாப்பு நலத்துறை அலுவலர்கள் மாணவியின் பெற்றோரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் மாணவியின் தாய் மூலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் மாணவியை கர்ப்பமாக்கிய கட்டடத் தொழிலாளி சீனிவாசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: என்னா அடி... பெண்ணிடம் செயின் பறித்த வடஇந்திய இளைஞரை வெளுத்துவாங்கிய மக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.