ETV Bharat / state

கார் விபத்தில் பெண் பலி: 3 பேர் படுகாயம் - Woman killed in car accident on Chennai-Bangalore National Highway

சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் பெண் உயிரிழந்தார்.

கார் விபத்தில் ஒருவர் பலி:3 பேர் படுக்காயம்

author img

By

Published : May 3, 2022, 2:18 PM IST

திருப்பத்தூர்: சென்னை எழும்பூர் பகுதியைச் சேர்ந்த ஷாம் உணவகம் நடத்தி வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் இன்று (மே.3) பெங்களூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த வீரக்கோவில் அருகில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது.

அப்போது அப்பகுதியில் சாலையை கடக்க முயன்ற ஆட்டோ மீது மோதாமல் இருக்க ஷாம் காரை திருப்ப முயற்சித்தார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் அருகில் இருந்த கோயில் வளாகத்தில் புகுந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த மாலதி (57) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண், 2 குழந்தைகள் உட்பட 5 பேர் காயங்களுடன் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சரவணன் தலைமையிலான காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:'புழல்' பட நடிகர் மனோ விபத்தில் உயிரிழப்பு

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.