திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த மாதனூர் பட்டுவம் பட்டி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி சரஸ்வதி இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். சரஸ்வதி நேற்று (ஜூன்5) மாலை தனது நிலத்தில் பணிகளை முடித்து வீடு திரும்பிய போது கனமழையில் சிக்கியுள்ளார்.
அப்போது அண்ணாமலை என்பவருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள மாட்டுக்கொட்டகையில் சரஸ்வதி மழைக்காக ஒதுங்கிய போது எதிர்பாராத விதமாக சூறைக்காற்றினால் நிலத்திலிருந்த மாட்டுத்தீவன மரம் வேரூடன் சாய்ந்து மாட்டுக்கொட்டகையிலிருந்த சரஸ்வதி மீது விழுந்ததுள்ளது.
இதில் படுகாயம் அடைந்த சரஸ்வதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் மரத்தின் இடிபாடுகளில் சிக்கியிருந்த சரஸ்வதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆம்பூர் அருகே சூறைக்காற்றுடன் பெய்த கன மழையில் மாதனூர் - ஒடுகத்தூர் சாலைகளில் உள்ள சில புளியமரங்கள் வேரூடன் சாய்ந்து சாலையில் விழுந்ததில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சரக்கு ரயிலில் கண்டெய்னர் மேல் நின்றபடி பயணம் செய்த நபரால் பரபரப்பு!