உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸில் 19 வயது இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. இதனை எதிர்த்து சமூக ஆர்வலர்கள், பல்வேறு எதிர்க்கட்சிகள் தங்க கண்டனத்தைப் பதிவு செய்தனர். இந்நிலையில், உயிரிழந்த பெண்ணின் உடலை பெற்றோர் சம்மதம் இல்லாமலேயே காவல் துறையினர் எரித்தனர்.
இதனைத்தொடர்ந்து உ.பி. முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், உ.பி. அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விசிகவின் மாநில துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மனிஷா படுகொலைக்கு காரணமான யோகி ஆதித்யநாத் அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் எனவும்; படுகொலைக்கு காரணமானவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வன்னியரசு உள்பட 200க்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் மண்பத்தில் அடைத்து, பின்னர் விடுவித்தனர்.
இதையும் படிங்க: கிம்ஸ் மருத்துவமனையுடன் ரேலா மருத்துவமனை புரிந்துணர்வு ஒப்பந்தம்!