திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ஷாகிராபாத் பகுதியில் வசித்து வருபவர் முபாரக். இவர் இன்று காலை தனது இருசக்கர வாகனத்தை தனது வீட்டின் அருகே நிறுத்தி வைத்துள்ளார். பின்னர் வெளியே வந்து பார்த்த போது, இருசக்கர வாகனம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதைத் தொடர்ந்து, முபாரக் வீட்டின் அருகே பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமிராவில் பதிவானக் காட்சிகளை வைத்து சோதனை மேற்கொண்ட போது, இளைஞர் ஒருவர் முபாரக் வீட்டின் அருகே நிறுத்திவைத்திருந்த இருசக்கர வாகனத்தைத் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து வாணியம்பாடி நகர காவல்நிலையத்தில் முபாரக் புகார் அளித்தார். அதனடிப்படையில், வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து காவல் துறையினர் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற நபரைத் தேடி வருகின்றனர். மேலும் பட்டப்பகலில் இருசக்கர வாகனம் கொள்ளைபோனச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:இருசக்கர வாகனத்தை திருடும் சிசிடிவி காட்சி - இளைஞர் கைது