திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி முஸ்லிம்பூர் பகுதி அபூபக்கர் தெருவை சேர்ந்தவர் நூரே சபா. இவரது கணவர் அதாவுர் ரஹமான் சென்னையில் பணிபுரிந்து வருகிறார்.
நூரே சபாவின் தாயார் ஷர்புன் நிசா உடல்நலக்குறைவு காரணமாக வாணியம்பாடி நீலீக் கொள்ளை பகுதியிலுள்ள உறவினர் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.
அவரை பார்துது விட்டு நூரே சபா இன்று வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது இரு பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த 85 சவரன் தங்க நகை, 2 லட்சத்து 65 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போனது தெரியவந்தது.
இதுதொடர்பான புகாரின் பேரில் வாணியம்பாடி நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சம்பவ இடத்தை திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி நேரில் ஆய்வு செய்தார். வீட்டின் மொட்டை மாடியில் உள்ள இரும்பு கிரிலை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையும் படிங்க :வெளிநாடுகளில் உள்ள தமிழ்நாட்டு கோயில் சிலைகள் மீட்கப்படும் - அமைச்சர் சேகர்பாபு