ETV Bharat / state

வாணியம்பாடியில் தந்தையை காணாத ஏக்கத்தில் பள்ளி மாணவி தற்கொலை!

வாணியம்பாடி அருகே 10 ஆண்டுகளுக்கு மேல் தந்தையை காணாத ஏக்கத்தில் சாரி அம்மா என கடிதம் எழுதி வைத்து விட்டு 10 ஆம் வகுப்பு பள்ளி சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

வாணியம்பாடியில் தந்தையை காணாத ஏக்கத்தில் பள்ளி மாணவி தற்கொலை!
வாணியம்பாடியில் தந்தையை காணாத ஏக்கத்தில் பள்ளி மாணவி தற்கொலை!
author img

By

Published : Aug 5, 2023, 3:35 PM IST

வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பாப்பானேரி பகுதியை சேர்ந்தவர் சரண்யா. கட்டிடம் வேலை செய்து வரும் இவருடைய 15 வயது மகள் தனுஶ்ரீ, நிம்மியப்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 10 வகுப்பு படித்து வந்து உள்ளார். இந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 4ஆம் தேதி) பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிறுமி அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கலகலப்பாக பேசி உள்ளார். பின்னர் தனது வீட்டில் இருந்த ஒரு துணியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.

இதனைத் தொடர்ந்து சிறுமியின் தாய் சரண்யா, கட்டிட வேலை முடிந்து வீட்டிற்கு வந்த போது மகள் தூக்கில் தொங்கியவாறு சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிடவே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்து வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்திற்கு தகவல் அளித்து உள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: ஜமீன்தாரின் வாரிசுகள் என கூறும் இருதரப்பினருக்கிடையே மோதல்:தேனியில் பரபரப்பு!

பின்னர் இதுகுறித்து காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், சிறுமியின் தாய் சரண்யா, கணவர் செந்தமிழ் செல்வன் என்பவரை கடந்த 2010 ஆண்டு முதல் பிரிந்து கடந்த 13 வருடங்களாக தன் மகளுடன் பாப்பனேரி பகுதியில் தனிமையில் வசித்து வந்து உள்ளதாகவும், தன் தந்தை தன்னை பார்க்க வரவில்லை என்ற ஏக்கத்திலும், மன அழுத்தத்திலும் சிறுமி தற்கொலை செய்துக் கொண்டு இருப்பதாக தகவல் தெரிவித்தனர்.

மேலும் வீட்டுப் பாடம் எழுதும் நோட்டு புத்தகத்தில் அம்மா மன்னித்து விடுங்கள் என்று சிறுமி ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்தது கண்டறிந்தனர். மேலும் சம்பவம் குறித்து வாணியம்பாடி கிராமிய காவல் துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் தீர்வு அல்ல. ஒருவேளை, உங்களுக்கு தற்கொலை எண்ணம் தோன்றினாலோ அல்லது அதுகுறித்த சந்தேகங்கள் ஏற்பட்டாலோ, வாரத்தின் 7 நாட்களும்,. 24 மணி நேரமும் இடைவிடாது செயல்படும் சினேகா அறக்கட்டளையின் 044- 24640050 தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும், டாடா நிறுவனத்தின் 9152987821 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு, தேவையான உதவிகளை பெறலாம்.

இதையும் படிங்க: பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலருக்கு பாலியல் தொல்லை: திமுக உறுப்பினர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.