ETV Bharat / state

ஆறு மாதங்களுக்கு பின்னர் திறக்கப்பட்ட வாணியம்பாடி உழவர் சந்தை - thiruppattur district news

திருப்பத்தூர்: வாணியம்பாடியில் ஆறு மாதங்களுக்கு பின்னர் உழவர் சந்தை இன்று (அக்.5) முதல் இயங்கத் தொடங்கியது.

Vaniyambadi market open
Vaniyambadi market open
author img

By

Published : Oct 5, 2020, 2:45 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சண்டை மேடு பகுதியில் உழவர் சந்தை இயங்கி வருகிறது. இந்த உழவர் சந்தையில் வாணியம்பாடியை சுற்றியுள்ள ஆலங்காயம், ரெட்டியூர், காவலூர், சத்திரம் வீரராக வலசை, பீமா குளம் செக்குமேடு உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 250 விவசாயிகள் தங்களுடைய இந்த உழவர் சந்தைக்கு கொண்டு வந்து பொது மக்களுக்கு நேரடி விற்பனை செய்து வந்தனர்.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த இந்த உழவர் சந்தையை வாணியம்பாடியில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்திற்கு இடமாற்றம் செய்து அங்கு தற்காலிகமாக இயங்கி வந்தது.

இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இன்று (அக்.5) முதல் தகுந்த இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து பாதுகாப்புடன் இயங்க மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் உத்தரவிட்டார். ஏற்கனவே 250 விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை விற்பனை செய்து வந்த நிலையில் தகுந்த இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்ற நோக்கில் நாள் ஒன்றிற்கு 100 விவசாயிகள் மட்டுமே உள்ளே சென்று விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வாணியம்பாடி உழவர் சந்தை
வாணியம்பாடி உழவர் சந்தை

உள்ளே சென்று விற்பனை செய்யும் விவசாயிகள், பொருட்கள் வாங்க செல்லும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் உள்ளே சென்று தகுந்த இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று உழவர் சந்தை நிர்வாக அலுவலர் முருகதாஸ் ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து அறிவுறுத்திவருகிறார்.

இதையும் படிங்க:

இளைஞர் அடித்துக் கொலை: மகனின் சாவுக்கு நீதி கேட்டு தாயார் மனு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.