திருப்பத்தூர்: வாணியம்பாடியில் உள்ள இஸ்லாமிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் வாணியம்பாடி முஸ்லீம் கல்விச்சங்கம் மற்றும் இந்திய அரசின் உருது மொழி வளர்ச்சிக்கான தேசிய ஆணையமும் இணைந்து கடந்த 03.01.2023 அன்று 25ஆவது தேசிய உருது கண்காட்சியை உருது மொழி வளர்ச்சிக்கான தேசிய ஆணையத்தின் இயக்குநர் ஷேக் அகில் அஹமத் மற்றும் வாணியம்பாடி தோல் தொழிலதிபர்கள் மற்றும் வி.ஐ.டி.வேந்தர் விஸ்வநாதன் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
இந்த உருது புத்தககண்காட்சியில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலிருந்து 65க்கும் மேற்பட்ட புத்தக பதிப்பாளர்கள் 100க்கும் மேற்பட்ட புத்தக நிலையத்தை அமைத்து, தங்களது புத்தகங்களை விற்பனைக்காக காட்சிப்படுத்தினர். உருது புத்தக கண்காட்சியின் இறுதி நாளான நேற்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா பங்கேற்றார்.
மேலும் கடந்த 03.01.2023 முதல் 11.01.2023 வரை தொடர்ந்து 9 நாட்கள் நடைப்பெற்ற இந்த உருது புத்தக கண்காட்சி உருது இசைக்கச்சேரியுடன் நேற்று நிறைவு பெற்றது. தொடர்ந்து 9 நாட்கள் நடைபெற்ற இந்த உருது புத்தக கண்காட்சியில் ஏராளமான இஸ்லாமிய பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் இஸ்லாமிய மக்கள் பங்கேற்ற நிலையில், எதிர்பார்த்ததை விட ஏறத்தாழ சுமார் ரூ.50 லட்சத்துக்கும் மேலான மதிப்புள்ள புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக உருது மொழி வளர்ச்சி தேசிய ஆணையத்தின் இயக்குநர் ஷேக் அகில் அஹமது தெரிவித்தார்.
இதையும் படிங்க:பொன்முடியின் செயல் சரியில்லை - சீறிய குஷ்பூ