திருப்பத்தூரிலிருந்து சேலம் செல்லும் ரயில்வே டிராக்கில், தாயப்ப நகர் பகுதிக்கு அருகில், அடையாளம் தெரியாத சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இறந்தவர் கருப்பு நிற பேண்ட், கறுப்பு நிற டீசர்ட் அணிந்துள்ள நிலையில், அவரது தலை, கை துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளது.
இந்நிலையில் இறந்தவர் ரயிலில் பயணம் செய்தவரா, இல்லை அவரை அடித்து கொலை செய்து எவரேனும் வீசி விட்டுச் சென்றார்களா, இல்லை தண்டவாளத்தைக் கடக்க முற்படும்போது விபத்து நேர்ந்ததா உள்ளிட்ட பல கோணங்களில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல் ஆய்வாளர் வடிவுக்கரசி சம்பவ இடத்திற்குச் சென்று பல்வேறு கோணங்களிலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது உடற்கூராய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டுள்ளது.