திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சிக்குள்பட்ட நீலிகொல்லைப் பகுதியைச் சார்ந்தவர் ரயிஸ் அகமத். இவர் நேற்று (செப்.06) மதியம் தனது வீட்டிற்கு வெளியில் ஹோண்டா ஷைன் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, வீட்டிற்குச் சென்று உணவருந்திவிட்டு வந்து பார்த்தபோது தனது இருசக்கர வாகனம் மாயமானதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்னர் வீட்டின் அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்துபோது தனது வாகனத்தை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திருடிச் செல்லும் காட்சிகள் தெரியவந்தது.
இதனையடுத்து அவர் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் ஒன்றினை அளித்தார். புகாரின் அடிப்படையில், சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்த காவல் துறையினர் பைக் திருடனை தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: ராயபுரத்தில் ரூ.50,00 மதிப்பிலான கேமராக்கள் திருட்டு!