ஆம்பூரை அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் இன்று(மே.31) அதிகாலை ரயில் இருப்பு பாதையிலுள்ள சிக்னல் பழுதாகியது. இந்த சிக்னலை சரிபார்க்கும் பணியில், திருப்பத்தூர் புதூர் நாடு பகுதியைச் சேர்ந்த முருகேசன், பிகார் மாநிலத்தைச் சேர்ந்த பர்வேஷ் குமார் ஆகிய இருவரும் ஈடுபட்டிருந்தனர்.
அப்பகுதியில் பெய்த கன மழையால், இருப்பு பாதையில் ரயில் வருவதை அறியாத இருவர் மீது ஜோலார்பேட்டையில் இருந்து ரேணிகுண்டா சென்ற சரக்கு ரயில் மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்தில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர், தண்டவாளத்தில் கிடந்த உடலை மீட்டு, உடற்கூராய்விற்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். நேற்றிரவு(மே.30) முதல் ஆம்பூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையினால் தான் ரயில்வே சிக்னலில் பழுது ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு