ETV Bharat / state

திருப்பத்தூரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 8 பேர் வீடு திரும்பினர்

திருப்பத்தூர்: சமய மாநாட்டில் கலந்துகொண்டவர்களுடன் தொடர்பிலிருந்த 12 பேரில் 8 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர்களை மருத்துவர்கள் வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்.

தனிமைப்படுத்தப்பட்டிருந்த 8 பேர் வீடு திரும்பினர்

author img

By

Published : Apr 18, 2020, 10:37 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் சமய மாநாடு, வெளிநாடு, வெளி மாநிலங்களுக்குச் சென்று திரும்பிய சுமார் 12 பேரை வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி வைத்திருந்தனர். அதில் ஏற்கனவே 2 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருந்தது கண்டறியபட்டு வேலூர் கரோனா பிரிவிற்கு மாற்றப்பட்டனர்.

அவர்களுடன் தொடர்பிலிருந்த 12 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கரோனா பரிசோதனை நடைபெற்றுவந்தது. இந்நிலையில் அந்த 12 பேரில் 8 பேருக்கு கரோனா தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டு மருத்துவர்கள் அவர்களை வீட்டிற்கு அனுப்பிவைத்தனர். மீதமுள்ள நான்கு பேருக்கு பரிசோதனை நடைபெற்றுவருகிறது.

தனிமைப்படுத்தப்பட்டிருந்த 8 பேர் வீடு திரும்பினர்

வீட்டிற்கு அனுப்பிய 8 பேரும், தங்களைத் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபீல், மாவட்ட ஆட்சியர் சிவனருள் நேரில் வந்தும் அடிக்கடி தொலைபேசியில் தொடர்புகொண்டும் நலம் விசாரிப்பதாகத் தெரிவித்தார். மேலும் அவர்கள் தங்களை கவனமாகப் பார்த்துக் கொண்ட மருத்துவர்களுக்கும், அரசுக்கும் நன்றி தெரிவித்தனர்.

வீட்டிற்குச் சென்ற 8 பேரும் தொடர்ந்து 14 நாள்களுக்குத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: தப்லீகி ஜமாத் விவகாரத்தில் ஊடகங்களின் இரட்டை நிலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.