ஆம்பூரில் ஞாயிற்றுகிழமை (ஜூலை 12) முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் ஆம்பூர் ஓ.ஏ.ஆர் தியேட்டர் அருகில் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த இளைஞர் முகிலனின் வாகனத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தபோது திடீரென அந்த இளைஞர் தீக்குளித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக அங்கு பணியில் இருந்த காவலர்கள் ஐந்து பேரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவிட்டார்.
மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த விசாரணை அலுவலராக டி.எஸ்.பி பிரவீன்குமார் நியமிக்கப்பட்டார். அவர் நேற்று இரவு முதல் விசாரணையை தொடங்கினார்.
முதலில், இளைஞர் தீக்குளித்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் இருந்து கண்காணித்த பின்னர் சம்பவம் நடந்தபோது பணியில் இருந்த காவல் துறையினரிடம் விசாரணை நடத்தினார். இதனையடுத்து அந்த இளைஞர் முகிலன் தீக்குளித்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
இதையும் படிங்க: 'கரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி' - அமைச்சர் விஜய பாஸ்கர்