திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மதுவிலக்கு அமல்பிரிவு காவல் நிலையத்தில், தலைமைக் காவலராக பணிபுரிந்து வருபவர் பாஸ்கர். இவர் தமிழ்நாடு - ஆந்திர எல்லையில் உள்ள சோதனைச் சாவடியில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது கரோனா தொற்று உறுதியானது.
இதனைத்தொடர்ந்து, வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில், அவர் பூரண குணமடைந்து மீண்டும் வாணியம்பாடி மதுவிலக்கு அமல்பிரிவு காவல் நிலையத்தில் பணிக்குத் திரும்பினார். அப்போது, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் பழக்கூடை கொடுத்து அவரை அன்புடன் வரவேற்றார். இதில், காவல் நிலையத்தில் பணிபுரியும் சக காவலர்களும் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:கரோனா குறித்த விழிப்புணர்வு பாடலை வெளியிட்ட பரங்கிமலை போலீஸ்