ETV Bharat / state

திருப்பத்தூர் தொகுதிகள் வலம்: தேர்தல் 2021; எதிர்பார்ப்பும் களநிலவரமும்..!

author img

By

Published : Mar 4, 2021, 10:37 PM IST

Updated : Mar 14, 2021, 4:58 PM IST

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலிருந்து கடந்த 2019ஆம் ஆண்டு, தமிழ்நாட்டின் 35ஆவது மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டம் உதயமானது. திருப்பத்தூர் மாவட்டத்திற்கு மேற்கே கிருஷ்ணகிரி மாவட்டமும், தெற்கு மற்றும் கிழக்கே திருவண்ணாமலை மாவட்டமும், கிழக்கே வேலூர் மாவட்டமும் மற்றும் வடக்கே ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.

திருப்பத்தூர் தொகுதிகள் உலா: தேர்தல் 2021; எதிர்பார்ப்பும் களநிலவரமும்..!

வாசல்:

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.

ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் சட்டப்பேரவைத்தொகுதி, அதிகளவிலான அந்நியச் செலாவணியை நாட்டிற்குப் பெற்றுத்தருவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதுமட்டுமல்ல சுவையான பிரியாணிக்கும் இந்த ஊரை அனைவரும் நாவில் சுவையுற நினைவு கொள்வர். அத்தகைய ஆம்பூரில் இருந்து ரெட்டித்தோப்பு பகுதிக்குச் செல்ல ரயில்வே மேம்பாலம் வேண்டும் என மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். ஏனெனில், ஆம்பூர் ரயில் பாலத்திற்கு அடியில், உள்ள சுரங்க வழித்தடத்தில் மழைக்காலத்தில் மழை நீருடன் சாக்கடை நீரும் தேங்குவதால், இப்பகுதியைக் கடந்து செல்லும் மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

குறிப்பாக ரெட்டித்தோப்புப் பகுதியைக் கடந்து பெத்தலேகம், நாயக்கனேரி மலைப்பகுதி, பனங்காட்டூர் மலைப்பகுதி ஆகிய ஊர்களுக்குச் செல்லும் சுமார் ஏறத்தாழ 15,000க்கும் மேற்பட்டோரின் முக்கியக் கோரிக்கையாக ரயில்வே மேம்பாலம் இருக்கிறது. ஆனால், ரெட்டித்தோப்பு ரயில்வே மேம்பாலம் அமைக்க, அதற்கான இடமும் பணமும் ஒதுக்கிய பின்னரும் பணிகள் தொடங்காமல் இருப்பது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.

வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டத்தில், அதிக அளவு தோல் பதனிடும் தொழிற்சாலைகளைக் கொண்ட நகரம் வாணியம்பாடி. இத்தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரானது பாலாற்றில் கலப்பதால், அப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர் அதிக அளவு உப்புத்தன்மையுடன் காணப்படுகிறது. எனவே, நிலத்தடி நீர் உப்பாகாமல் காக்க, அரசு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்; நியூ டவுன் ரயில்வே கேட் மூடப்பட்டிருக்கும் தருணத்தில், குறித்த நேரத்தில் பொதுமக்கள் செல்ல சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச்செல்லும் சூழ்நிலை உள்ளதால், அப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன.

திருப்பத்தூர் தொகுதிகள் வலம்: தேர்தல் 2021; எதிர்பார்ப்பும் களநிலவரமும்..!

திருப்பத்தூர்:
மாவட்டத்தின் தலைநகராக விளங்கும் திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில், பெரும்பாலான மக்களின் முக்கியத் தொழில் விவசாயம். இதனருகில் முக்கிய சுற்றுலாத் தலமான ஏலகிரி மலை இருப்பது, இப்பகுதி சிறுவியாபாரிகளுக்கு சிறு வருமானத்தைக் கொடுக்கிறது.

சில ஆண்டுகளாக மழைப்பொழிவு இல்லாததால் பெரும்பாலானோர் வெளியூர்களுக்கு கூலி வேலைக்குச் செல்ல நேரிடுவதால், இப்பகுதி மக்களுக்குத் தொழில்வாய்ப்பை நல்கும் தொழிற்பேட்டைகளை அமைத்துத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜோலார்பேட்டை:

தெற்கு ரயில்வேயின் முக்கிய சந்திப்பாக ஜோலார்பேட்டை ரயில்வே நிலையம் விளங்குகிறது. சென்னையிலிருந்து சேலம், பெங்களூரு, மும்பை, திருவனந்தபுரம் போன்ற நகரங்களை இணைக்கும் ரயில்கள் இவ்வூரினைக் கடந்தே செல்கின்றன. இப்பகுதியில் இருக்கும் மக்களுக்கும் தொழில்வாய்ப்புகள் குறைந்த அளவே உள்ளதால், உரிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தித்தர அரசு முயலவேண்டும் எனக் கோரிக்கை வைக்கின்றனர், இத்தொகுதி மக்கள்.

கள நிலவரம்:

ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுகவின் இரா.பாலசுப்ரமணியமும், 2019ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் திமுகவின் அ.செ.விஸ்வநாதனும் எம்.எல்.ஏக்களாக வெற்றிபெற்றனர். அதனால், இது பொதுவான மக்களின் தொகுதியாகவே இருக்கிறது. இருப்பினும், ரெட்டித்தோப்புப் பகுதிக்குச் செல்ல ரயில்வே மேம்பாலம் வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை அதிமுக ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்படாமல் இருந்தது, வரும் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவான அலையை ஏற்படுத்தியுள்ளது.

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல், வாணியம்பாடி தொகுதியின் உறுப்பினராக உள்ளார். இங்கு கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களே மக்கள் பணியாற்றி வருகின்றனர். இருப்பினும், வாணியம்பாடியின் முக்கியப் பிரச்னையான நிலத்தடி நீர் மாசடைவதைத் தடுக்காமல் விட்டது, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு நாடாளுமன்றத்தில் அதிமுக ஆதரவு அளித்தது ஆகியவை இங்கு இருக்கும் பெருவாரியான இஸ்லாமிய மக்களிடையே அதிருப்தியை உண்டாக்கியுள்ளது. எனவே, இத்தொகுதி திமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்குச் சாதகமாக உள்ளது.

திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் திமுகவைச் சேர்ந்த நல்லதம்பி சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார். 1951ஆம் ஆண்டு முதல் தற்போதுவரை பார்க்கும்போது இத்தொகுதியில் 8 முறை திமுகவும், 2 முறை அதிமுகவும் வெற்றிபெற்றுள்ளன. ஆட்சிமாற்றம் குறித்த அலை பொதுமக்களிடையே பரவி வரும் சூழலில், இம்முறை இத்தொகுதியில் மீண்டும் திமுக வெல்ல வாய்ப்புள்ளது.

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, ஜோலார்பேட்டை சட்டப்பேரவையின் உறுப்பினராக உள்ளார். கடந்த இரண்டு முறை இதேதொகுதியில் வெற்றிபெற்ற அமைச்சர் கே.சி.வீரமணி பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளதால், மூன்றாவது முறை ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன.

மொத்தமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் மூன்று தொகுதிகளில் திமுகவும், ஒரு தொகுதியில் அதிமுகவும் வெற்றிபெற வாய்ப்புள்ளது.

Last Updated : Mar 14, 2021, 4:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.