திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுற்று வட்டார பகுதிகளில் மீண்டும் கரோனா தொற்று தாக்கம் அதிகரித்துள்ளது. இதனையடுத்து சோலூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நூறு படுக்கை வசதிகளுடன் சிறப்பு தனிமைப்படுத்தல் மையம் அமைக்கப்பட்டு வருகிறது.
அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சிவனருள், வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணியம் ஆகியோர் இன்று (ஏப்.12) நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
இதையும் படிங்க : 2024 நிலவு திட்டத்திற்காக ரோவரை வடிவமைத்த பள்ளி மாணவர்கள்!