ETV Bharat / state

திருப்பத்தூர் பாலாறு வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு 120வது நினைவு நாள்.. மாவட்ட ஆட்சியர் அஞ்சலி!

Tirupathur: திருப்பத்தூரில் பாலாறு பெருவெள்ளத்தில் உயிரிழந்த 200க்கும் மேற்பட்டவர்களின் நினைவுத் தூணிற்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

திருப்பத்தூர் பாலாறு வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு 120 வது நினைவு நாள்
பாஸ்கர பாண்டியன்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 13, 2023, 8:11 AM IST

திருப்பத்தூர் பாலாறு வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு 120 வது நினைவு நாள்

திருப்பத்தூர்: வாணியம்பாடியில் 1903ஆம் ஆண்டு ஏற்பட்ட பாலாறு பெருவெள்ளத்தில், உயிரிழந்த 200க்கும் மேற்பட்டவர்களின் 120வது நினைவு நாளை முன்னிட்டு, அவர்களின் நினைவுத் தூணிற்கு, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் பாலாறு உள்ளது. 1903ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக பல ஏரிகள் உடைந்து, பாலாற்றில் வரலாறு காணாத அளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நள்ளிரவில், திடீர் என்று ஏற்பட்ட வெள்ளத்தினால், வாணியம்பாடியில் பாலாற்றின் அருகே இருந்த பல வீடுகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர்.

அதனைத் தொடர்ந்து, பாலாற்று வெள்ளத்தில் உயிரிழந்த பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, வாணியம்பாடி சந்தைப் பகுதியில், நகராட்சி சார்பில் 5 அடி உயரத்திற்கு நினைவுத் தூண் அமைக்கப்பட்டு, ஆண்டுதோறும் நவம்பர் 12ஆம் தேதி பாலாற்றை காக்க நினைக்கும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள், பாலாறு நினைவுத் தூணிற்கு மாலை அணிவித்து, வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: வடமாநிலத் தொழிலாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. கோவையில் இருந்து திருப்பூர் வழியாக இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்!

அந்த வகையில், இந்த ஆண்டும் வாணியம்பாடியில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள், பாலாற்றை காக்க பெரிதும் குரல் கொடுத்து உயிர் நீத்த நபர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பங்கேற்று, நினைவுத் தூணிற்கு மெழுகுவர்த்தி ஏந்தி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் பேசிய அவர், “பாலாறு என்பது வாணியம்பாடி, ஆம்பூர் மக்களின் உயிர் ஓட்டம் மட்டுமல்ல, அது நமது ரத்த ஓட்டமும். பாலாற்றில் கழிவுகளைக் கலக்கும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், பாலாற்றை காக்க வேண்டியது நம் அனைவரின் பொறுப்பாகும். ஆற்றங்கரை மணலைப் பாதுகாக்க வேண்டும். பாலாற்றை பாதுகாத்தால் முழு பகுதியின் வாழ்வாதாரம் சிறப்பாக இருக்கும்” என்று கூறினார்.

இதையம் படிங்க: அனகாபுத்தூர் ஆக்கிரமிப்பு சம்பவம்: பாதிக்கபட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவித்த திருமாவளவன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.