ETV Bharat / state

சிறுவன் சரமாரியாக குத்திக் கொலை - போலீசார் விசாரணை - murder of a youth in Bangalore

திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை அருகே சிறுவன் சரமாரியாக கத்தியால், குத்தி கொலை செய்யப்பட்டது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுவன் கொலை
சிறுவன் கொலை
author img

By

Published : Feb 17, 2020, 1:56 PM IST

கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள மவுலி ரோடு, 5ஆவது பிளாக் பகுதியல் வசித்து வருபவர் ஆட்டோ ஓட்டுநர் பாரதசாரதி. இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், அபினேஷ் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். அபினேஷ் தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படிந்து வந்தார்.

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு, இவர்கள் குடும்பத்துடன் ஏலகிரியில் உள்ள கலைச்செல்வியின் அம்மா வீட்டிற்குச் சென்றுள்ளனர். அங்கு அபினேஷை மட்டும் விட்டுவிட்டு, பாரதசாரதி குடும்பத்துடன் பெங்களூரு திரும்பினார். அன்று மாலை அபினேஷ் தனது பெரியப்பா மகன் முகேஷ் உடன் வெளியே சென்றுள்ளார்.

அப்போது 'தயாள்' என்ற ரவுடி, அவர்களை வழிமறித்து ’தனக்கு ஏன் மரியாதை கொடுக்கவில்லை’ என்று மிரட்டியுள்ளார். அப்போது இவர்களுக்கிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ரவுடி தயாள் இரண்டு சிறுவர்களையும் சரமாரியாக குத்திவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.

சிறுவன் கொலை

உடனே அருகில் இருந்தவர்கள் சிறுவர்களை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அபினேஷ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். முகேஷுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனைக்கு வந்த காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, ரவுடி தயாளைத் தீவிரமாக தேடி வருகின்றனர். ரவுடி தயாள் மீது ஏற்கெனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதையும் படிங்க: கண்ணாம்பூச்சி விளையாட சென்ற சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.