ETV Bharat / state

டிஜஜி வருண் குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு...பிப்ரவரி 19ஆம் தேதி சீமான் ஆஜராக திருச்சி நீதிமன்றம் உத்தரவு - DEFAMATION CASE AGAINST SEEMAN

டிஐஜி வருண் குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

டிஐஜி வருண் குமார், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
டிஐஜி வருண் குமார், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் (Image credits-Etv Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 21, 2025, 6:54 PM IST

திருச்சி: டிஐஜி வருண் குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

டிஐஜி வருண் குமார் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் சமூக ஊடக தளங்களில் அவதூறு பரப்பியதாக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் திருச்சி மாவட்ட குற்றவியல் நான்காவது நீதிமன்றத்தில் டி.ஐ.ஜி. வருண் குமார் தாக்கல் செய்திருந்த மனுவில், "தம் மீதும் தமது குடும்பத்தினர் குறித்தும் சமூக வலை தளங்களிலும், பொது வெளியிலும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,"என வலியுறுத்தி இருந்தார்.

இந்த மனு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் தேதி திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 4 நீதிபதி(பொறுப்பு) பாலாஜி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நேரில் ஆஜரான டிஜஜி வருண் குமார், "நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமானும் என்னுடைய கடமையை செய்ததற்காக என் மீதும் என் குடும்பத்தினர் குறித்தும் அவதூறாகவும் ஆபாசமாகவும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: "தொடர்ச்சியாக பொய் பேசி சீமான் தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியாது"-திருமுருகன் காந்தி

மேலும் பொதுவெளியிலும் என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் சாதி உள்ளிட்டவை குறித்து பகிரங்கமாக பொதுவெளியில் சீமான் பேசினார். மிரட்டல் விடுக்கும் வகையிலும் அவர் பேசினார்," என வாக்குமூலம் அளித்தார். அதனை நீதிபதி பாலாஜி முழுமையாக பதிவு செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு ஜனவரி மாதம் 7 ஆம் தேதியும் விசாரணைக்கு வந்தது. அப்போதும் ஆஜரான டி.ஐ.ஜி வருண் குமார் தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் எண் 4 நீதிபதி பாலாஜி முன்பு விசாரணை நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி பாலாஜி, வழக்கு விசாரணையை பிப்ரவரி 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.மேலும், அன்றைய தினம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.