திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் வருவாய் கோட்டாச்சியர் காயத்ரி சுப்பிரமணியம், வட்டாச்சியர், நகராட்சி அலுவலர்கள் ஆகியோர் தலைமையில் கரோனா விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. இதில், ஒலிபெருக்கியின் மூலமும் வாகன விளம்பரங்கள் மூலமும் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதைத் தொடர்ந்து, கரோனா வைரஸை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாணியம்பாடியிலிருந்து புறப்படும் அனைத்து பேருந்துகளின் மீதும் நகராட்சி அலுவலர்கள் டைசால் மருந்தை தெளித்தனர்.
இதையும் படிங்க: மதுபோதையில் மகள் மீது பாலியல் வன்முறை: தந்தை கைது