தமிழ்நாட்டில் இன்று (ஜூலை23) ஒரே நாளில் 6 ஆயிரத்து 472 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 88 பேர் உயிரிழந்துள்ளனர்.
மொத்தமாக இதுவரை 3 ஆயிரத்து 232 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 964 ஆக உள்ளது.
இதில் திருப்பத்தூரில் இன்று ஒரே நாளில் இதுவரையில் இல்லாத அளவு அதிகபட்சமாக 74 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
மேலும், மாவட்டத்தில் இதுவரையில் 728 பேர் கொரோனா தொற்று பாதித்துள்ளனர். இதுவரை 465 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாவட்டத்தில் இதுவரை 26 ஆயிரத்து 12 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொண்டு, தற்போது ஆயிரத்து 362 பேர் பரிசோதனை முடிவிற்காக காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க...தமிழ்நாட்டில் மேலும் 6,472 பேருக்கு கரோனா உறுதி