ETV Bharat / state

10 ஆண்டு காதல், 5 ஆண்டு திருமண வாழ்க்கை - மனைவியை கைவிட்ட கணவர் - திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

திருப்பத்தூர் அருகே தாழ்த்தப்பட்ட பெண்ணை காதலித்து திருமணம் செய்து 5 வருடம் ஒன்றாக வாழ்ந்த பின்பு சாதியை காரணம் காட்டி கைவிட்ட கணவனை கண்டித்து மனைவி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

மருத்துவமனை முன்பாக மனைவி ஆர்ப்பாட்டம்
மருத்துவமனை முன்பாக மனைவி ஆர்ப்பாட்டம்
author img

By

Published : Mar 12, 2022, 3:11 PM IST

திருப்பத்தூர்: கொடும்பம் பள்ளியை சேர்ந்தவர் திருப்பதி (35). இவரும் காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புட்குழியைச் சேர்ந்த வளர்மதி (35) என்பவரும் 2007ஆம் ஆண்டு ராணிப்பேட்டையில் உள்ள அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் டிடிஎட் படிக்கும் பொழுது காதலித்துள்ளனர்.

அதே ஆண்டு சென்னை கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரியில் திருப்பதிக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தவுடன் ஆசிரியர் பயிற்சியை கைவிட்டு திருப்பதி மருத்துவம் படிக்க சென்றுள்ளார். அச்சமயத்திலும் 2017ஆம் ஆண்டு வரை சுமார் பத்து வருடங்களாக காதலை தொடர்ந்துள்ளனர்.

பின்பு வளர்மதியின் வற்புறுத்தலின் பெயரில் பெற்றோர்கள் முன்னிலையில் காஞ்சிபுரம் ள காமாட்சியம்மன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். தற்போது வரை சேர்ந்து வாழ்ந்துள்ளனர்.

தம்பதி
தம்பதி

இந்நிலையில் மருத்துவம் முடித்து மருத்துவராகவும் கொடுமாம் பள்ளி பகுதி அதிமுக சார்பாக ஊராட்சி மன்ற உறுப்பினராகவும் உயர்ந்த திருப்பதி திடீரென வளர்மதியின் சாதி அடையாளத்தை முன்னிறுத்தி டித்து துன்புறுத்தி சித்ரவதை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மருத்துவமனை முன்பாக மனைவி ஆர்ப்பாட்டம்

இது சம்பந்தமாக திருப்பத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு தொடர்ந்த பின்பு அதையே காரணம் காட்டி திருப்பதி வளர்மதியுடன் வாழ விரும்பவில்லை எனக் கூறி அவரை வீட்டை விட்டு துரத்தியுள்ளார். கடந்த ஆறு மாத காலமாக தாய் வீட்டில் இருந்த வளர்மதி இன்று திருப்பத்தூர் அருகே மடப்பள்ளியில் உள்ள திருப்பதிக்கு சொந்தமான சந்திரலிங்கம் மருத்துவமனை முன்பு அமர்ந்து போரட்டத்தில் ஈடுபட்டார். அவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த லாரி ஓட்டுநர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.