திருப்பத்தூர்: ஆம்பூரில் பிசியோதெரபி மருத்துவராகப் பணிபுரிபவர், பிரித்விராஜ். இவர் கடந்த ஜனவரி மாதம் ஆன்லைன் மூலம் ஓலா எலக்ட்ரிக் பைக் ஒன்றை வாங்கியுள்ளார்.
இந்த ஓலா பைக்கை பதிவு செய்வதற்காக இன்று குடியாத்தம் ஆர்டிஓ அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து ஆம்பூர் நோக்கி வந்தபோது லட்சுமிபுரம் என்ற இடத்தில் இந்த பைக் சார்ஜ் இல்லாமல் நின்றுள்ளது. இதுகுறித்து பிரித்விராஜ் சர்வீஸ் சென்டருக்கு கால் செய்துள்ளார்.
இரண்டு மணி நேரமாகியும் சர்வீஸ் சென்டரில் இருந்து யாரும் வராததாலும், ஏற்கெனவே 3 முறை இந்த பைக் பழுதாகியுள்ளதாலும், சார்ஜ் விரைவில் தீர்ந்து விடுவதாலும் ஆத்திரத்தில் ஓலா இ-பைக் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். முன்னதாக ஓலா இ-பைக்கினை சார்ஜ் செய்தால் மணிக்கு 130 கிலோ மீட்டர் வரை செல்லும் என ஓலா நிர்வாகம் உத்தரவாதம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:'ரீசார்ஜபிள் இ-பைக்' - மதுரை கல்லூரி மாணவரின் அசத்தல் உருவாக்கம்