ETV Bharat / state

தமிழ்நாட்டில் 99 விழுக்காடு பேர் எடப்பாடி பழனிசாமிக்கு தான் ஆதரவு - கே.சி. வீரமணி - DMK is working to split the AIADMK said by KC Veeramani

அதிமுகவை பிளவுபடுத்த திமுக பின்னிருந்து செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி செய்தியாளர் சந்திப்பில் குற்றம் சாட்டியுள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த வீரமணி
செய்தியாளர்களைச் சந்தித்த வீரமணி
author img

By

Published : Jun 20, 2022, 5:50 PM IST

திருப்பத்தூர்: அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்த விவகாரம் குறித்து திருப்பத்தூர் மாவட்ட அதிமுகவினர் சார்பில், அதிமுக மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் வணிக வரித்துறை மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட அதிமுக செயலாளருமான கே.சி.வீரமணி தலைமையில் ஒன்றியச்செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.

இதில் அதிமுகவிற்கு ஒற்றைத்தலைமைதான் வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவிற்கு தலைமை ஏற்று நடத்த வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து கே.சி.வீரமணி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் ஒருமனதாக எடப்பாடி பழனிசாமிக்கு ஆதராவக தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.

அதிமுகவை பிளவுபடுத்திப் பார்க்க திமுக நினைக்கிறது. அதற்காக தொந்தரவு கொடுத்து பின்னிருந்து செயல்படுகிறது. அது ஒருபோதும் நடக்காது. கழக எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு வழங்குவார்.

தற்போது ஒற்றைத்தலைமையின் அவசியம் ஏற்பட்டுள்ளது. இரட்டைத் தலைமையில் இருந்தால் ஒருவருடைய முடிவினை மற்றொருவர் ஏற்கமாட்டார். இது எதிரிகளுக்கு சாதகமாக அமையும். இதற்கு ஒற்றைத்தலைமை தான் அவசியம். புகழேந்தியை கட்சியில் சேர்த்து தொண்டர்களின் வெறுப்பை பெற்றுள்ளார், ஓ.பன்னீர்செல்வம்.

செய்தியாளர்களைச் சந்தித்த வீரமணி

அவரது மகனும் ஸ்டாலினை சந்தித்து திமுக நல்லாட்சி நடத்துகிறது எனக்கூறுகிறார். ஓபிஎஸ் எத்தனை உயர்மட்ட குழு அமைத்தாலும் எடப்பாடியார் தான் ஒரே தலைவர். தமிழ்நாட்டில் 99 விழுக்காடு பேர் எடப்பாடி பழனிசாமிக்கு தான் ஆதரவு தெரிவிக்கின்றனர்” என்றார்.

இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறும் - ஓபிஎஸ்க்கு பதிலடி தந்த ஈபிஎஸ் தரப்பு...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.