ETV Bharat / state

"குடி தண்ணீரில் கூட சாதி பார்க்கின்றனர்" - மாஸ்க் அணிந்து பட்டியலின சமூகத்தினர் மௌன போராட்டம்! - தேவலாபுரம் ஊராட்சி மன்றம்

'அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை, குடிக்கும் தண்ணீரில் கூட சாதி பார்த்து விடுகின்றனர். இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் ஊராட்சி நிர்வாக நடவடிக்கை எடுக்கவில்லை' என திருப்பத்தூர் மாவட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tirupattur
மாஸ்க் அணிந்து தலித் சமூகத்தினர் மௌன போராட்டம்
author img

By

Published : Jun 22, 2023, 9:40 AM IST

மாஸ்க் அணிந்து தலித் சமூகத்தினர் மௌன போராட்டம்

திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வாணக்காரதோப்புப் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை தேவைகளான குடிநீர், கழிவு நீர், கால்வாய், மின்விளக்கு உள்ளிட்ட முறையான வசதிகள் இல்லையெனவும், வாணக்காரதோப்புப் பகுதி மக்களுக்கு குடிநீர் அவ்வப்போது மட்டுமே ஊராட்சி மன்ற நிர்வாகம் விடுவதாகவும் கூறுகின்றனர்.

அதுவும் ஒரு சில நேரங்களில் உப்பு தண்ணீர் வழங்குவதாகவும், இதனால் அடிக்கடி நோய்த்தொற்று ஏற்படும் நிலை உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்பகுதிக்கு பொது கழிப்பிடம் கட்டித்தரக்கோரி ஊராட்சி மன்ற நிர்வாகம் முதல் மாவட்ட நிர்வாகம் வரை, பலமுறை மனு அளித்தும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த வாணக்கார தோப்புப் பகுதிமக்கள், அப்பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு வாயில் கறுப்பு மாஸ்க் அணிந்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த உமராபாத் மற்றும் ஆம்பூர் நகர காவல்துறையினர் மற்றும் தேவலாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் ரேவதி குபேந்திரன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டனர்.

அதன்பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி திட்டம்) கிருஷ்ணன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பின் வாணக்கார தோப்புப் பகுதியில் உள்ள அடிப்படை பிரச்னைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் வாணக்கார தோப்புப் பகுதியில் அடிப்படைத் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்யப்படும் என உறுதியளித்ததின் பேரில் போராட்டத்தைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் மேகநாதன் என்பவர் கூறுகையில், "தேவலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட 3, 4, 11 ஆகிய மூன்று வார்டுகளும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர் எங்களுக்கு குடிநீர், மின்விளக்கு, கழிவுநீர், கால்வாய் போன்ற எவ்வித அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை.

இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவரிடம் முறையிட்டால் அரசு அலுவலரை கேளுங்கள் எனக் கூறுகின்றனர். மேலும் தங்களது வார்டிற்கு சாதி பார்த்து தண்ணீர் விடுகின்றனர். அதுவும் 15 நாட்களுக்கு ஒருமுறை வரும் புழு விழுந்த தண்ணீரை குடித்து உயிர் வாழ்ந்து வருகின்றோம்.

ஆனால், தேவலாபுரம் ஊராட்சிக்குட்பட்ட மற்ற பகுதிகளில் குடிநீர் வீணாகச் செல்கின்றது. மேலும் இப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்யாமல் இருப்பதால், நோய்த்தொற்று பரவும் அபாயம் இருக்கின்றது. ஆகையால் இதுகுறித்து உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆஷாட நவராத்திரி: தஞ்சையில் வராஹி அம்மனுக்கு வளையல் அலங்காரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.