திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி பகுதியைச் சேர்ந்த டீ மாஸ்டர் குமார் (45). இவர் கந்திலி காவல் நிலையம் எதிரே உள்ள டீக்கடையில் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார்.
இன்று காலை வழக்கம்போல டீ கடையில் இருந்தபோது சின்னூர் பகுதியைச் சேர்ந்த நந்தியின் மகன் மணி(20) என்ற இளைஞர் டீ மாஸ்டரை பார்த்து முறைத்ததாக கூறப்படுகிறது. ஏன் முறைக்கிறாய் என கேட்டதற்கு அந்த இளைஞர் கத்தியால் குத்திவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இச்சம்பவ இடத்தில் துடிதுடித்த டீ மாஸ்டரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்பு அவர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து கந்திலி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கத்திக்குத்து சம்பவத்திற்கு வேறு ஏதாவது காரணம் இருக்கின்றதா என்கிற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
இதையும் படிங்க :கைதான கடத்தல் கும்பல்; தப்பிய அம்மன் சிலை