கரோனா வைரஸை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் மது பிரியர்கள் மது கிடைக்காமல் அல்லாடி வருகின்றனர்.
இந்நிலையில் பல்வேறு இடங்களில் அரசு டாஸ்மாக் கடைகளை துளையிட்டு மதுபாட்டில்களை சிலர் திருடிச் சென்றுள்ளனர். அந்தவகையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் இயங்கி வந்த 10க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் உள்ள 1 கோடி ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களை எடுத்து தனியார் கட்டடத்தில் ரகசியமாக பதுக்கி வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: மீன் மார்க்கெட்டாக மாறிய பேருந்து நிலையம்