திருப்பத்தூர்: கர்நாடக மாநிலம் கேஜிஎஃப் பகுதியைச் சேர்ந்த ஜீவா என்பவருடைய மகன் விஜய் வர்மன் என்கிற சினோஜ் ( வயது 29) இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட ஐந்து வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் கடந்த மாதம் 8-ஆம் தேதி கேஜிஎஃப் பகுதியில் அதே பகுதியை சேர்ந்த அவருடைய நண்பர் விக்கி மற்றும் சினோஜ் ஆகிய இருவரும் கஞ்சா போதையில் இருந்து உள்ளனர்.
கஞ்சா போதையில் விக்கியை சினோஜ் வெட்டி கொலை செய்துவிட்டு தமிழ்நாடு - கர்நாடக எல்லை பகுதியில் உள்ள திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வந்து தலைமை மறைவாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் திருப்பத்தூர் அடுத்த காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் மகன்கள் உலகநாதன் (29) மற்றும் மோகன் (26) இருவரும் சினோஜிக்கு நண்பர்களாக உள்ளனர்.
இதன் காரணமாக கர்நாடகாவில் கொலை செய்துவிட்டு திருப்பத்தூருக்கு தப்பி வந்து தலைமறைவாக இருந்த உலகநாதன் மற்றும் மோகன் ஆகிய இருவரிடமும் சேர்த்து செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார் சினோஜ். மேலும், அவ்வப்போது திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சினோஜ், உலகநாதன் மோகன் ஆகிய மூன்று பேரும் திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரம் பகுதியில் வீட்டை உடைத்து திருடுவிட்டு சாலையில் வந்தபோது ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த திருப்பத்தூர் கிராமிய காவல் உதவி ஆய்வாளர் அகிலன் மற்றும் போலீசார் மூவரையும் பிடித்து விசாரணை நடத்தியதில் மூவரும் முன்னுக்கு பின் முரனாக பதில் அளித்துள்ளனர்.
இதனால் அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று அங்கு கிடிக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, சினோஜ் மீது பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதன் காரணமாக அவரை கர்நாடக மாநிலம் கேஜிஎஃப் போலீசாரை திருப்பத்தூருக்கு அழைத்து அவர்களிடம் சினோஜை ஒப்படைத்தனர்.
மேலும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட உலகநாதன் மற்றும் மோகன் இருவரையும் திருட்டு வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: 20 நாட்களில் 5 துப்பாக்கிச்சூடு.. தமிழகத்தில் அச்சத்தில் உள்ள ரவுடிகள்!