ETV Bharat / state

"பெண்களுக்கு அண்ணனாகவும், அரணாகவும் நிற்பேன்" - தவெக விஜய் கைப்பட கடிதம்! - TVK VIJAY

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தைத் தொடர்ந்து, பெண்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தவெக தலைவர் விஜய் (TVK Vijay) தனது கைப்பட கடிதம் எழுதியுள்ளார்.

தவெக விஜய்
தவெக விஜய் - கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 30, 2024, 9:00 AM IST

சென்னை: நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமாக விஜய் தமிழ்நாட்டுப் பெண்களுக்காக, தனது கைப்பட ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், அண்ணனாகவும், அரணாகவும் எல்லா சூழ்நிலைகளிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன் எனவும், தைப் பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக சமீபத்தில் நடந்த அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது ஆதங்கங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தவெக விஜய் கைப்பட எழுதியுள்ள கடிதம்
தவெக விஜய் கைப்பட எழுதியுள்ள கடிதம் (Credits - ETV Bharat Tamil Nadu)

அந்த வகையில் தவெக தலைவர் விஜய் எழுதியுள்ள கடிதத்தில், "அன்புத் தங்கைகளே, கல்வி வளாகம் முதற்கொண்டு, ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் தாய்மார்கள் என்னருமைத் தங்கைகள், பெண் குழந்தைகள் என அனைத்துத் தரப்புப் பெண்களுக்கும் எதிராக நடக்கும் 'சமூக அவலங்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு அவலங்கள், பாலியல் குற்றங்கள் என்று பல்வேறு வன்கொடுமைகளைக் கண்டு உங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கும், சொல்லொணா வேதனைக்கும் ஆளாகிறேன்.

இதையும் படிங்க: "மாணவர்கள், பெற்றோர் அச்சம் அடைய வேண்டாம்"- அண்ணா பல்கலையில் ஆய்வு செய்த ஆளுநர் ஆர்.என்.ரவி தைரியம்!

யாரிடம் உங்கள் பாதுகாப்பைக் கேட்பது? நம்மை ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனும் இல்லை என்பது தெரிந்ததே. அதற்காகவே இந்த கடிதம். அண்ணனாகவும், அரணாகவும் எல்லா சூழ்நிலைகளிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன்.

எனவே, எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பான தமிழகத்தைப் படைத்தே தீருவோம். அதற்கான உத்தரவாதத்தை நாம் அனைவரும் இணைந்தே விரைவில் சாத்தியப்படுத்துவோம்" எனத் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.