ETV Bharat / state

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்; திருப்பத்தூரில் சிரமத்துக்கு உள்ளாகிய பொதுமக்கள்..!

TNSTC Workers Strike: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டதை அடுத்து 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தித் திருப்பத்தூரில் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tamil Nadu Government Transport Corporation workers strike in Tirupathur
திருப்பத்தூரில் அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 9, 2024, 5:40 PM IST

திருப்பத்தூரில் அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

திருப்பத்தூர்: தமிழக போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 19-ம் தேதி சிஐடியு, ஏஐடியுசி, டிடிஎஸ்எப் உள்ளடக்கிய 16 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீசை வழங்கினர்.

அதற்கடுத்த நாளே அண்ணா தொழிற்சங்க பேரவை தலைமையில் இயங்கும் கூட்டமைப்பு சார்பிலும் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதையடுத்து, பேச்சுவார்த்தைக்கு வருமாறு நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்களுக்குத் தொழிலாளர் நலத்துறை அழைப்பு விடுத்தது.

இதன் தொடர்ச்சியாக இரண்டு கட்ட பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், இன்று (ஜன.09) வேலைநிறுத்தம் நடைபெறும் என தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்தன. வேலை நிறுத்தத்தைத் தவிர்க்க அமைச்சர் சிவசங்கர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.

இது தொடர்பாக நிதித்துறையுடன் ஆலோசிக்க வேண்டியிருப்பதால் பேச்சுவார்த்தை தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று (ஜன.08) மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதிலும் உடன்பாடு எட்டப்படாமல் தோல்வி அடைந்தது. இதனால் திட்டமிட்டபடி இன்று (ஜன.09) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கும் என்பதைப் போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட சேலம் கோட்டத்தில், 49 பேருந்துகள் புறநகர்ப் பகுதிகளிலும் 20 பேருந்துகள் நகர்ப் பகுதிகளிலும் என்று மொத்தமாக 64 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதில் தற்போது புறநகர்ப் பகுதிகளுக்கு 11 பேருந்துகளும் மற்றும் நகர்ப் பகுதிகளுக்கு 15 பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளன.

அதேபோல், விழுப்புரம் பணிமனையில் இருந்து 95 பேருந்துகள் புறநகர்ப் பகுதிகளிலும் 24 பேருந்துகள் நகர்ப் பகுதிகளிலும் என்று மொத்தமாக 119 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதில் தற்போது புறநகர்ப் பகுதிகளுக்கு 14 பேருந்துகளும் நகர்ப் பகுதியில் 3 பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளன.

மேலும், அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படாததின் காரணமாக. வெளியூர்களுக்குச் செல்லக்கூடிய பயணிகள் செல்ல முடியாத சூழ்நிலையில் பொதுமக்களும் மற்றும் பயணிகளும் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: செருப்படியிலிருந்து இளைஞர்கள் தப்பித்துக் கொள்ள இமெயில் உதவுகிறது - இயக்குநர் பாக்யராஜ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.