திருப்பத்தூர்:நாட்றம்பள்ளி அடுத்த குனிச்சியூர் பகுதியைச் சார்ந்தவர் சூர்யா (25). இவருக்குச் சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் பத்திற்கும் மேற்பட்ட புளியமரங்கள் உள்ளன.
இந்நிலையில், தற்பொழுது புளியம்பழம் காய்க்கும் சீசன் என்பதால் சூர்யாவிற்குச் சொந்தமான நிலத்தில் உள்ள புளியமரத்தில் அளவிற்கு அதிகமாக புளியம்பழம் காய்க்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டு மக்களின் வாய்மொழி வழக்கத்தில், புளியமரத்தின் வலிமையை உணர்த்தும் விதமாக ’புடிச்சா புளியங்கொம்பா புடி’ என்று கூறுவது உண்டு.
ஆனால், புளியமரமே சாய்ந்து தொங்கும் அளவிற்கு அதிக அளவில் புளியங்காய் காய்க்கத் தொடங்கியதன் காரணமாக, புளிய மரத்தின் கிளைகளே உடைந்து விடும் நிலையில் உள்ளது.
எனவே, உரிமையாளரான சூர்யா வலிமையான புளியமர கிளைகளுக்கே, கீழே சாயாமல் இருக்க முட்டு வைத்துப் பாதுகாத்து வருகிறார். தற்போது புளியம்பழம் சீசன் என்பதால் தன்னுடைய மரத்தில் அதிகப் புளியங்காய் காய்த்துள்ளது எனவும் தகவல் தெரிவித்தார்.
இதையும் படிங்க:மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி - தமிழ்நாடு அரசு