திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கடாம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் வித்யாசாகர். இவர் அதே பகுதியில் வீடு கட்டுமானப் பொருட்களை விற்பனை செய்யும் கடை நடத்திவருகிறார்.
இந்நிலையில், அவரது கடைக்குள் ஐந்து அடி நீளமுள்ள கொடிய விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு புகுந்தது. உடனடியாக அவர் வனத்துறையிருக்கு தகவல் அளித்தார். அதற்குள் அங்கு வந்த பாம்பு பிடி வீரர் அசோக் என்பவர் அந்த பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். வனத்துறையினர் அதை பத்திரமாக எடுத்துச் சென்று வனப்பகுதியில் விட்டனர்.
இதையும் படிங்க: விவசாய நிலத்தில் மண்ணுளி பாம்பு: வனத் துறையிடம் ஒப்படைப்பு