ETV Bharat / state

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரே ஊரில் 12 இடங்களில் கொள்ளை; கிராம மக்கள் பீதி

வாணியம்பாடி அருகே முல்லை கிராமத்தில் கோயில் மற்றும் 11 வீடுகள் என 12 இடங்களில் மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர்.

திருடர்கள் கைவரிசை
திருடர்கள் கைவரிசை
author img

By

Published : Oct 19, 2022, 9:14 PM IST

திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த முல்லை கிராமத்தில் பூட்டி இருந்த வீடுகளைக் குறிவைத்து மர்ம நபர்கள் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். கொள்ளை சம்பவம் நடந்த வீடுகளின் உரிமையாளர்கள் மருத்துவமனை, உறவினர் வீடு, கோவில் திருவிழா என பல்வேறு காரணங்களுக்காக வெளியூர் சென்று இருந்தனர்.

மேலும் நேற்று இரவு முழுவதும் விட்டுவிட்டுப் பெய்த மழையைச் சாதகமாகப் பயன்படுத்திய மர்ம நபர்கள், கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார்(அதிமுக) சகோதரரான ரவீந்தர் குமார் என்பவர் வீடு உட்பட 11 வீடுகளின் பூட்டை உடைத்து உள்ளே சென்று 10 சவரன் தங்க நகை 2 லட்சம் ரூபாய் ரொக்க பணம் உள்ளிட்டவற்றைக் கொள்ளை அடித்துள்ளனர்.

மேலும் கிராமத்தின் மையப் பகுதியில் உள்ள முருகன் கோவில் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். சம்பவம் குறித்து வீட்டின் உரிமையாளர்கள் ஆலங்காயம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முல்லை கிராமத்தில் அடுத்தடுத்து 11 வீடுகள் மற்றும் 1 கோவிலின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் கிராம மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

திருடர்கள் கைவரிசை

இதையும் படிங்க: அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.5.5 லட்சம் மோசடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.