திருப்பத்தூர்: வாணியம்பாடி அரசு மருத்துவமனை அருகே ஏரி கால்வாய் செல்கிறது. இதனை ஆக்கிரமித்து சுமார் 30 ஆண்டுகளாக 48 வீடுகளை கட்டி வாழ்ந்து வந்தனர். இதனால் மழை காலங்களில் மழை நீர் ஏரி கால்வாயில் செல்ல முடியாமல் அரசு மருத்துவமனை மற்றும் சாலைகளில் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டது.
இதனை அகற்ற பல முறை அதிகாரிகள் முயன்ற போது அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அகற்றும் பணியை கைவிட்டனர்.
இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா உத்தரவின் பேரில் வட்டாட்சியர் சம்பத், நகராட்சி ஆணையாளர் மாரிசெல்வி உள்ளிட்ட அதிகாரிகள் ஜேசிபி இயந்திரங்கள் மூலமாக இன்று காலை முதல் ஏரி கால்வாய் ஆக்ரமித்து கட்டப்பட்டு இருந்த 48 வீடுகளை அகற்றினர்.
அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நீர் நிலையங்கள், அரசு புறம்போக்கு இடங்கள் ஆகியவற்றை ஆக்கிரமிப்பு செய்யும் போதே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.
இதையும் படிங்க: திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரே ஊரில் 12 இடங்களில் கொள்ளை; கிராம மக்கள் பீதி