ETV Bharat / state

திருப்பத்தூரில் குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்ட பெண் திடீர் மரணம்! - family planning operation

திருப்பத்தூரில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் திடீரென இறந்தார். இதனால் அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

Tiruppathur
திருப்பத்தூர்
author img

By

Published : Aug 18, 2023, 2:54 PM IST

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், காக்கணாம்பாளையம் ஊராட்சி சிங்கபாளையம் பகுதியை சேர்ந்தவர் டிரைவர் சாமிக்கண்ணு. இவரது மனைவி கோமதி(25) இவர் நிறைமாத கற்பிணி. இந்த நிலையில் பிரசவத்திற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை காக்கணாம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவர்களுக்கு சுகபிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது.

இதையும் படிங்க: வாக்குச்சாவடி பணிகளுக்கு பள்ளி ஆசிரியர்கள் நியமனம் - கேள்விக்குறியாகும் மாணவர்களின் கல்வி!

அதனை தொடர்ந்து கோமது குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்து நேற்று காலை (ஆக்ஸ்ட் 17) ஆண்டியப்பனூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கு கோமதிக்கு மருத்துவர்களால் அறுவை சிகிச்சை செய்ப்பட்டது.

ஆனால் கோமதி உடல்நிலை மோசமாக உள்ளதாக கருதிய ஆண்டிப்பனூர் மருத்துவர்கள் அவர்களின் உறவினர்களுக்கு தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பின்னர் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

இதையும் படிங்க: கால்நடை மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஓதுக்கீட்டு இடங்கள் அறிவிப்பு!

அதன் பின் அங்கு கோமதியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், கோமது ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். கோமதி இறந்த செய்தி அறிந்த அவர்களின் உறவினர்கள் ஆதிரமடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சற்று பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருப்பத்தூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தவறு செய்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தரமற்ற சாலையால் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 20க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் காயம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.