திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையம் அருகேயுள்ள முட்புதர்களில், ரயில்கள் மூலம் வெளி மாநிலத்திற்கு கடத்துவதற்காக 2 டன் ரேசன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக நாட்றம்பள்ளி வட்டாச்சியர் தலைமையிலான பறக்கும் படை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில், வட்டாச்சியர் தலைமையிலான பறக்கு படையினர் அந்த இடத்திற்கு விரைந்து சென்று முட்புதர்களில் பதுக்கி வைத்திருந்த 2 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். பின்னர் இதுகுறித்து நாட்றம்பள்ளி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 6 டன் ரேசன் அரிசி கடத்திய 4 பேர் கைது!