வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் முருகன் அடைக்கப்பட்டுள்ளார். முருகனுக்கு பல் வலி ஏற்பட்டதால் அதற்கு சிகிச்சை பெற இன்று (பிப்.23) அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார்.
அங்கு முருகனை பரிசோதித்த மருத்துவர்கள் மீண்டும் மார்ச் 1ஆம் தேதி அழைத்து வர கூறியதையடுத்து முருகன் மீண்டும் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்துசெல்லப்பட்டார்.
இதையும் படிங்க: கண் கலங்கிய நோயாளி வீடு தேடி மருந்துகளை எடுத்து சென்ற முதலமைச்சர் ஸ்டாலின்.. கரங்களைப் பற்றி ஆறுதல்...