திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த அம்பேத்கர் நகர் பகுதியில் சில நாள்களாக பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிக்குள் வெள்ள நீர் புகுந்தது. இந்நிலையில் 5 நாள்கள் கடந்தும் வெள்ள நீர் அப்புறப்படுத்தவில்லை.
இது குறித்து அப்பகுதி மக்கள் பல முறை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருந்தபோதிலும், இதுவரையில் மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை (நவ.22) மீண்டும் ஆம்பூர் - பேர்ணாம்பட் சாலையில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
போராட்டத்தால் கிடைத்த பலன்
இதனையறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் நீரை அப்புறப்படுத்தப்படும் என உறுதியளித்தனர்.
இதனையடுத்து, அப்பகுதி மக்கள் மறியலை கைவிட்டனர். தொடர்ந்து, சாலையின் நடுவே ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு வெள்ள நீர் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: Thenpennai river Drone visuals: தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் - கழுகுப் பார்வை காட்சிகள்