ETV Bharat / state

தடை செய்யப்பட்ட வாணியம்பாடி - வீடுகளுக்கே சென்று விற்பனை செய்யப்படும் காய்கறிகள்!

திருப்பத்தூர் : கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள வாணியம்பாடி நகராட்சியில் நடமாடும் காய்கறி அங்காடி மூலம் வீடுகளுக்கே நேரடியாக சென்று விற்பனை செய்யும் பணி தொடங்கியது.

Prohibited Vaniyampadi  - essential food items reaches homestep
தடைச்செய்யப்பட்ட வாணியம்பாடி - வீடுகளுக்கே சென்று விற்பனை செய்யப்படும் காய்கறிகள்!
author img

By

Published : Apr 16, 2020, 1:06 PM IST

உலகம் முழுவதும் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் கோவிட்-19 பெருந்தொற்று தமிழ்நாட்டில் இரண்டாம் கட்ட நிலை அடைந்திருக்கிறது. இதுவரை 1242 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 14 பேர் உயிரிழந்தனர் என தமிழ்நாடு மக்கள் நலவாழ்வு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க முழுமையான 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிகம் பாதிக்கப்பட்டதாக சிவப்பு குறியீடு மாவட்டங்கள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன.

நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் இதன் தாக்கத்தை தடுக்கும் நோக்கில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கரோனா தொற்றின் தீவிரம் உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில் அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர மாவட்ட ஆட்சியர் சிவனருள் தலைமையில் நேற்று (ஏப்ரல் 15) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதனடிப்படையில், வாணியம்பாடி முழுமையாக தடை செய்யப்பட்ட பகுதியாக ஆட்சியரால் அறிவிக்கப்பட்டது. இன்று முதல் மட்டும் செயல்படும், மளிகை கடைகள், காய்கறி சந்தைகள், இறைச்சி கடைகள், மருந்தகங்கள் ஆகியவை இயங்காது என்றும் ஒரு சில இடங்களில் மட்டும் வங்கிகள், ஏடிஎம் மையங்கள், மருந்தகங்கள் காலை 6 மணிமுதல் மதியம் 1 மணி வரை இயங்கும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.

தடைச்செய்யப்பட்ட வாணியம்பாடி - வீடுகளுக்கே சென்று விற்பனை செய்யப்படும் காய்கறிகள்!

பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டிய அவசியம் இல்லை, பொதுமக்களுக்கு தேவையான ரேஷன் பொருட்கள் உட்பட அனைத்து அத்தியாவசியப் பொருட்கள் மக்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதில் ஒரு பகுதியாக, கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள வாணியம்பாடி நகராட்சியில் அத்தியாவசிய பொருட்களை மக்கள் வசிக்கும் இடங்களுக்கே சென்று விற்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடமாடும் காய்கறி அங்காடி திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

தோட்டக்கலை, வேளாண்மைத் துறை, நகராட்சி நிர்வாகம் சார்பில் 90 வாகனங்கள் வாணியம்பாடி மட்டுமின்றி அதை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்கும் அனுப்பும் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையபாண்டியன், வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்ரமணி தலைமையில் தன்னார்வலர்கள் இணைந்து இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வாணியம்பாடியில் 6 பேருக்கு கரோனா வைரஸ் தொற்றுநோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து 144 தடை உத்தரவை தீவிரப்படுத்தும் வகையில் நகராட்சி பகுதிகள் முழுவதும் சீல் வைத்து கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இறைச்சிகளை ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளலாம் - வேலூர் ஆட்சியர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.