வேலூர்: விருப்பாச்சிபுரம், வாணியங்குளம் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் (27) என்பவர் 2012ஆம் ஆண்டு நகைக்காக மூதாட்டியை கொலைசெய்த வழக்கில் 2017ஆம் ஆண்டுமுதல் வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்துவந்தார்.
தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை என கடந்த 15ஆம் தேதி பரோலில் சென்றுள்ளார். 19ஆம் தேதி மாலை சிறைக்கு வர வேண்டியிருந்த நிலையில் சிறைக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.
இது குறித்து வேலூர் மத்திய சிறைத் துறை சார்பில் பாகாயம் காவல் நிலையத்தில் புகார் அளித்து தேடப்பட்டுவந்த நிலையில் இன்று வேல்முருகன் அவரது வீட்டின் பின்புறம் தற்கொலையால் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து அவரது உடலை மீட்ட காவல் துறையினர் வேலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்து அவர் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: சினிமா வாய்ப்பு: இளம்பெண் பாலியல் வன்புணர்வு?