திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. ஆலங்காயம் ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் திமுக 11 , அதிமுக 4, பாமக 2, சுயேட்சை உறுப்பினர் ஒருவர் வெற்றி பெற்றனர்.
வரும் 22ஆம் தேதி நடைபெறும் ஒன்றிய குழு உறுப்பினர் தலைவர் பதவிக்கு திமுகவைச் சேர்ந்த இருவர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் ஒன்றிய குழு வார்டு உறுப்பினர்கள் இன்று (அக்.20) ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பதவியேற்றனர்.
அப்போது இரு குழுக்களாக பிரிந்த திமுகவினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், லேசான தடியடி நடத்தி மோதலில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: துரை வைகோவுக்கு மதிமுக தலைமைக் கழக செயலாளர் பதவி