ETV Bharat / state

போலி டாக்டர் பட்டம் விவகாரம்: தலைமறைவாக இருந்த ஹரிஷ் கைது! - இசையமைப்பாளர் தேவா

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த நிகழ்வில் நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோர்க்கு வழக்கப்பட்ட போலியான டாக்டர் பட்டம் குறித்து அண்ணா பல்கலைக்கழகம் அளித்த புகாரின் அடிப்படையில் நிகழ்ச்சி நடத்திய தனியார் அமைப்பின் இயக்குநர் உள்பட இருவரை ஆம்பூர் அருகே போலீசார் கைது செய்தனர்.

police arrested two people including the director of a private company in the case of providing fake doctorate
போலி டாக்டர் பட்டம் வழங்கிய வழக்கில் தனியார் நிறுவன இயக்குனர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்
author img

By

Published : Mar 5, 2023, 12:42 PM IST

திருப்பத்தூர்: சர்வதேச ஊழல் ஒழிப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் என்ற பெயரில் கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி அன்று பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா, நடன இயக்குநர் சாண்டி, தொலைக்காட்சி பிரபலம் ஈரோடு மகேஷ், யூடியூப் பிரபலம் கோபி மற்றும் சுதாகர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

இதற்கான நிகழ்ச்சி, சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருக்கும் விவேகானந்தர் அரங்கத்தில் நடைபெற்றது. மேலும் இதில் ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் கலந்து கொண்டு கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கினார். ஆனால், தற்போது இவை அனைத்தும் போலியான டாக்டர் பட்டம் என குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ், இண்டர்நேஷனல் ஆண்டி கரப்சன் அண்ட் ஹியூமன் ரைட்ஸ் கவுன்சில் என்ற அமைப்பு தான் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி உள்ளனர். அதற்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவர்கள் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கை அரை நாள் வாடகைக்கு கிண்டி பொறியியல் கல்லூரியின் முதல்வரிடம் கேட்டுள்ளனர். அதற்கு பல்கலைக்கழகத்தின் சார்பில் அனுமதி கொடுக்கப்படவில்லை.

அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் கையெழுத்திட்ட லெட்டர் பேடுடன் வந்து மீண்டும் கடந்த ஜனவரி மாதம் அனுமதி கேட்டு உள்ளனர். ஓய்வு பெற்ற நீதிபதியின் கடிதம் என்பதால் நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் விருது வழங்குவதற்கான நிகழ்ச்சி என்பதால், அனுமதி வழங்கப்பட்டது.

அதில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்கு அண்ணா பல்கலைக்கழகத்தை பயன்படுத்தியது கண்டிக்கத்தது. இதில் ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகமும் ஏமாந்துள்ளார். வள்ளிநாயகத்திடம் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது எனவும், எங்களிடம் வள்ளிநாயகம் வருகிறார் எனவும் கூறி ஏமாற்றி உள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் விவேகானந்தர் அரங்கை இனிமேல் தனியார் நிறுவனங்களுக்கு வாடகைக்கு தருவதில்லை என முடிவெடுக்க உள்ளோம். கவுரவ டாக்டர் பட்டத்தை பல்கலைக்கழகம் தான் வழங்க வேண்டும். ஒரு அமைப்பு வழங்க முடியாது. அதில் வாங்கியவர்கள் ஏமாற்றப்பட்டதாக தெரிந்து கொண்டு இருக்கலாம்.

அந்த அமைப்பின் மூலம் பணம் கொடுத்து வாங்கியவர்களும், ஏமாற்றப்பட்டது தெரிந்தாலும் அமைதியாகவே இருப்பார்கள். டாக்டர் பட்டம் பெற்றவர்களுக்கும், உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியும் வந்த பின்னர், தவறு நடந்ததை தெரிந்து கொண்டிருப்பார் என்று விளக்கமளித்து இருந்தார்.

மேலும், அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் கோட்டூர்புரம் காவல் நிலையத்திலும், கையெழுத்து முறைகேடாக செய்யப்பட்டதாக ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் தரப்பில் மாம்பலம் காவல் நிலையத்திலும் புகார்கள் அளிக்கப்பட்டன. அதன்படி நிகழ்ச்சி நடத்திய அமைப்பின் இயக்குனரான ஹரிஷ் என்பவர் மீது ஏழு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தனிப்படையை அமைத்து போலீசார் விசாரணையை தொடங்கினர்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஹரிஷ் தலைமறைவானதால் காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இதற்கு இடையே சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பதிவான அந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வேண்டுமென ஹரிஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

ஆனால் அந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினரால் தீவிரமாக தேடப்பட்டு வந்த ஹரிஷ் ஆம்பூர் அடுத்த சான்றோர் குப்பம் வடிவேல் நகர் பகுதியில் அவரது அரசியல் நண்பரான குட்டி ராஜா வீட்டில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்து உள்ளது. அங்கு விரைந்த சென்னை தனிப்படை காவல்துறையினர் ஹரிஷ் உட்பட இருவரை கைது செய்து சென்னைக்கு அழைத்து சென்றனர். மேலும் அவரது வீட்டில் ஆம்பூர் நகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.