திருப்பத்தூர்: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99ஆவது பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் ’என் குப்பை என் பொறுப்பு’ என்னும் திட்டத்தை சென்னையில் நேற்று (ஜூன் 3) தொடங்கி வைத்தார்.
அதன்படி மாநிலம் முழுவதும் உள்ள திமுக சட்டப்பேரவை உறுப்பினர், நிர்வாகிகள் தங்களது தொகுதியில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டம் ஏரிக்கரை பகுதியில் குப்பைகளை சுத்தம் செய்யும் பணி நடந்தது. அப்போது, மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா, ஜோலார்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் தேவராஜ், திருப்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் நல்லதம்பி முன்னிலையில் பணி தொடங்கப்பட்டது.
சிறிதுநேரத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கிளம்பிவிட்டனர். ஆனால், ஆட்சியர் மட்டும் நகராட்சி துப்புரவு பணியாளர்களுடன் சேர்ந்து நீண்ட நேரம் குப்பைகளை அள்ளும் பணியை பார்வையிட்டும், அவ்வப்போது உதவி செய்தும் வந்துள்ளார். இவரது செயல் அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: 'ஹிந்தி தெரியவில்லை என்றால் கதிர் ஆனந்த் ஏன் நாடாளுமன்றத்திற்குச் செல்லவேண்டும்'