ETV Bharat / state

அரசு மருத்துவமனையும் வேண்டாம்.. சிகிச்சையும் வேண்டாம் - திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பரபரப்பு!

திருப்பத்தூர் தலைமை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்காமல் மெத்தனமாக செயல்படுகிறார்கள் எனக் கூறி விரக்தி அடைந்த ஒருவர், தனது குடும்பத்துடன் மருத்துவமனையை விட்டு வெளியேறிய சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.

திருப்பத்தூர் தலைமை அரசு மருத்துவமனையை விட்டு வெளியேறிய நோயாளிகள்

author img

By

Published : Jul 11, 2023, 1:55 PM IST

திருப்பத்தூர் தலைமை அரசு மருத்துவமனையை விட்டு வெளியேறிய நோயாளிகள்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்காமல் மெத்தனமாக செயல்படுகிறார்கள் எனக் கூறி விரக்தி அடைந்த ஒருவர், தனது குடும்பத்துடன் மருத்துவமனையை விட்டு வெளியேறிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வட்டார மருத்துவமனையாக இருந்த திருப்பத்தூர் அரசு மருத்துவமனையை தமிழ்நாடு அரசு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தி பல கோடி ரூபாய்களை செலவு செய்து பல அடுக்கு மாடிகளாக மருத்துவமனை மாற்றப்பட்டது.

இந்த நிலையில், போதுமான மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இல்லை எனவும், சிகிச்சை சரியாக இல்லை என்றும் கூறி விபத்தில் சிக்கி சிகிச்சைக்காக வந்த ஒருவர், தனது மனைவி மற்றும் குழந்தைகள் உடன் குடும்பமாக வெளியேறிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

திருப்பத்தூர் அடுத்த ஆதிசக்தி நகரைச் சேர்ந்தவர் சுஷ்மிதா. சிங்காரப்பேட்டை அடுத்த குப்பநத்தத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வன். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், சுஷ்மிதாவின் தந்தை அன்பழகனுக்கு கண் அறுவை சிகிச்சை செய்திருந்த நிலையில், அவரைப் பார்ப்பதற்காக திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரம் காளியம்மன் கோயில் பகுதியில் இருசக்கர வாகனத்தில் மனைவி மற்றும் குழந்தைகள் உடன் வந்து கொண்டிருந்த கலைச்செல்வனுக்கு விபத்து ஏற்பட்டு உள்ளது.

இதனையடுத்து விபத்தில் காயம் அடைந்த கலைச்செல்வன், நேற்று மாலை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இதையும் படிங்க: அரசு பள்ளி மாணவர்களை பாத்ரூம் கழுவச் செல்வதாக சர்ச்சர்.. திருப்பத்தூர் ஆட்சியரிடம் பெற்றோர்கள் புகார்!

அவ்வாறு அனுமதிக்கப்பட்ட நேரத்தில் இருந்து நீண்ட நேரமாக மருத்துவர்கள் தனக்கும், தன்னுடைய மனைவி குழந்தைகளுக்கும் சரியாக சிகிச்சை அளிக்கவில்லை எனவும், காயப்பட்ட இடங்கள் சீல் பிடித்து வலி தாங்க முடியாத காரணத்தால் தங்களுக்கு சிகிச்சை அளிக்கக் கோரி குடும்பத்தினருடன் சேர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாத அரசு மருத்துவர்கள் அவரவர் அவருடைய வேலையை செய்து கொண்டிருந்ததாக கூறிய கலைச்செல்வன் குடும்பத்தினர், அரசு மருத்துவமனையும் வேண்டாம், அவர்கள் சிகிச்சையும் வேண்டாம் என்று விரக்தி அடைந்த கலைச்செல்வன் மற்றும் அவரது குடும்பத்தினர் மருத்துவமனையை விட்டு வெளியேறிச் சென்றனர். இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியிலும், சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம் அவசர சட்டம் மூலம் நிறைவேற்ற வேண்டும் - வழக்கறிஞர் கூட்டத்தில் தீர்மானம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.