திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர்குஷாவா ஹா நேற்று (ஜூலை 8) ஆம் தேதி திடீர் ஆய்வு மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் பணிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
வட்டார வளர்ச்சி அலுவலகப் பணி பதிவேடுகள் முறையாக பராமரிக்க வேண்டும், வீடு வீடாகச் சென்று காய்ச்சல் பரிசோதனை செய்யும் பணியில் தொய்வு ஏற்படக் கூடாது. தொய்வு கண்டறிந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
ஆட்சியர் ஆய்வு
அதை தொடர்ந்து 102 ரெட்டியூர் ஊராட்சி, ராணிப்பேட்டை கிராமத்தில் 100 நாள் பணியாளர்கள் செய்து வரும் வரப்பு கட்டும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது முகக்கவசம் அணியாமல், கிருமி நாசினி உள்ளிட்ட கரோனா பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றாமல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
100 நாள் வேலை திட்ட பணியாளர்களிடம் பணி, முறையான ஊதியம் வழங்கப்படுகிறதா என்று கேட்டறிந்தார். பின்னர் பணியாளர்களின் தினசரி அட்டையை ஆய்வு செய்தார்.
அப்போது அட்டையில் ரேஷன் விவரங்கள், வேலை வழங்கப்பட்ட விவரங்கள் முறையாகப் பதிவு செய்யபடவில்லை என்பதை கண்டறிந்தார். இதையடுத்து ஊராட்சி செயலாளர் ஆனந்தனை பணியிடை நீக்கம் செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். ஆனந்தனை பணியிடை நீக்கம் செய்து வட்டார வளர்ச்சி திட்ட பணிகள் அலுவலர் மணவாளன் நடவடிக்கை மேற்கொண்டார்.
இதையும் படிங்க: சென்னையில் காற்று மாசுபாடு இருமடங்கு அதிகம்: கிரீன்பீஸ் ஆய்வறிக்கை